June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே பைக் மீது அரசு பஸ் மோதி 2 பேர் பலி

1 min read

Government bus collides with bike near Tenkasi, 2 killed

25.10.2022
தென்காசி அருகே அச்சம்பட்டி பகுதியில் பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பைக்கில் சென்ற இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

விபத்து

தென்காசி – கடையநல்லூர் பிரதான சாலையில் அச்சம்பட்டி அருகே பைக் மீது அரசு பேருந்து மோதியத்தில் பைக்கில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி பிரதான சாலையில் தென்காசியில் இருந்து ஒரு பைக்கில் இரண்டு பேர் வந்து கொண்டிருந்தனர். அப்போது ராஜபாளையத்திலிருந்து கொல்லம் நோக்கி வந்த அரசு பேருந்து பைக் மீது நேருக்கு நேராக மோதி ஒத்துக் கொள்ளாதது பயணம் செய்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் தென்காசி மங்கம்மா சாலை பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பது தெரியவந்துள்ளது.மேலும் உயிரிழந்த பெண் யார் என்பது குறித்து விவரம் தெரியவில்லை நடத்தி வருகின்றனர்.தீபாவளி தினத்தன்று நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *