July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி பகுதியில் மீண்டும் கனிமவள கொள்ளை-முன்னாள் எம்எல்ஏ கே.ரவி அருணன் புகார்

1 min read

Mineral robbery again in Tenkasi region-former MLA K. Ravi Arunan complains

25.10.2022
தென்காசி பகுதியில் மீண்டும் கனிமவள கொள்ளை அதிக அளவில் நடைபெறுவதாக தென்காசி அம்பாசமுத்திரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ரவி அருணன் குற்றம் சாட்டியுள்ளார்.

தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
கே.ரவி அண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கனிமவள கொள்ளை

தென்காசி மாவட்டத்தில் கனிமவளங்களை அளவுக்கு அதிகமாக லாரிகளில் ஏற்றி செல்வதால் செங்கோட்டை நகராட்சி குற்றாலம் மேலகரம் பேரூராட்சி மற்றும் அதன் சாலையோர கிராமங்களுக்கான தாமிரபரணி குடிநீர் திட்டமும் தென்காசி நகராட்சி மற்றும் அதன் வழியோர கிராமங்களுக்கான தாமிரபரணி குடிநீர் திட்டமும் சுரண்டை நகராட்சி மற்றும் கடையநல்லூர் நகராட்சிக்கான தாமிரபரணி குடிநீர் திட்டமும் அளவுக்கு அதிகமான கனரக வாகனங்களில் கனிம வளங்களை ஏற்றுவதால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீர் மாசுபடுகிறது.

வாகன போக்குவரத்து சட்டத்தில் அடிக்கடி மாற்றம் செய்து சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் சட்டம் இயற்றினாலும் அதை அதிகாரிகள் தங்கள் சுயநலத்திற்காக கையூட்டு பெற தான் அச்சட்டம் பயன்படுகிறது. அதிக கனரக வாகனங்கள் சாலையில் செல்வதால் பொதுமக்களும் குழந்தைகளும் அலுவலகம் செல்வோரும் சாலையில் மிகவும் அச்சத்தோடு பயணிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை நிலவி வருகின்றது

கேரளாவில்…

கேரளா மாநிலத்தில் இரவு நேரத்திலும் பள்ளிக்கூட நேரத்திலும் அவர்கள் சாலையில் கனரக வாகனங்களை சாலையில் அனுமதிப்பதில்லை. ஆனால் தமிழகத்திலோ இரவு நேரத்திலும் உச்ச நேரத்திலும் பள்ளிக்கூட நேரத்திலோ மிகவும் அதிக பாரம் ஏற்றி கனரக வாகனங்கள் சாலையில் பயணித்து வருகிறது..
தமிழக கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்கு அதிக அளவில் கடத்தப்படுவதால் எதிர்கால சந்ததியினருக்கு கனிம வளங்கள் கிடைக்காது என்ற அவல நிலை ஏற்படும். கேரள மாநிலத்தில் நம்மை விட அதிக அளவில் கனிம வளங்கள் இருந்தும் கூட அவர்கள் அதை சுரண்டுவதற்கு அனுமதிப்பதில்லை.. மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதால் சட்டத்தை மதித்து கனிம வளங்களை பாதுகாக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் அதற்கு எதிர்மாறான நிலை நிலவுகிறது
தற்போது தினசரி 500க்கும் மேற்பட்ட வாகனங்களில் நமது கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளும் திறக்கப்பட்டதால் இந்த எண்ணிக்கை விரைவில் இருமடங்காக உயர வாய்ப்புள்ளது.

அனைவரும் இந்த பதிவை அரசின் காதுகளுக்கு எட்டும் வரைக்கும் அனைத்து வாட்ஸ்அப் குழுவிலும் பகிர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

விரைவில் கனிமவள பாதுகாப்பு இயக்கம் சார்பாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற இருக்கிறது. அனைவரும் இந்தப் போராட்டத்தில் கட்சி பாகுபாடின்றி கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த கனிமவள பாதுகாப்பு இயக்க குழுவிற்கு தங்களது முகவரியை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
கே.ரவி அருணன் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.