July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

8.11.2022 சந்திர கிரகணம், பரிகாரம் செய்ய வேண்டியவர்கள்

1 min read

8.11.2022 lunar eclipse, those who need to make amends

5.11.2022
வருகிற 8.11.2022 அன்று அதாவது ஐப்பசி மாதம் 2-ந் தேதி செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணம் நிகழ்கிறது. பவுர்ணமி திதியில் பிரதமையில் பரணி நட்சத்திரம் 2ம் பாதம் மேஷ ராசி ரிஷப லக்கினத்தில் இந்த சந்திர கிரகணம் நிகழ்கிறது.
. இந்த சந்திர கிரகணம் ஆரம்பம் பகல் 2.39 மணிக்கு. கிரகணத்தின் மத்திய காலம் மாலை 4.29 மணி. சந்திர கிரகணம் முடியும் நேரம் மாலை 6.10 மணி.

இன்று பகல் 12 மணிக்குள் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள், அஸ்வினி, பரணி, கிருதிகை, பூரம் பூராடம் நடத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தோஷம். அவர்கள் கிரகண சாந்தி செய்ய வேண்டும். கர்ப்பிணிகள் பகல் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை வெளியே வரக்கூடாது.

பொதுவாக கிரகண நேரத்தில் கோவில்களில் நடை சாற்றப்படும். கிரகணம் என்றாலே குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். கிரகண நேரத்தில் எதுவும் சாப்பிடக் கூடாது. தொடர்ந்து நீண்ட நேரம் ஏதும் சாப்பிடாமல் இருக்க முடியாது என்பவர்கள், பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். முடிந்த வரை பழச்சாறாக எடுத்துக் கொள்வது நல்லது.
கிரகணம் விட்ட பிறகு மாலை 6.30 மணிக்கு குளித்து விட்டு அவரவர் சம்பிராதாயபடி பூஜை செய்யலாம். கோவிலையும் அதன்பிறகு சுத்தம் செய்து பூஜை செய்ய வேண்டும். தர்ப்பணம் செய்பவர்கள் மாலை 6.30 மணிக்கு செய்யலாம். கிரகண காலத்தில் வீட்டில் சமைத்த உணவு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். மேலும் அரிசி, பருப்பு போன்ற உணவு பொருட்களில் தர்ப்பை புல்லை போட்டு வைப்பது நல்லது. தவிர்க்க முடியாத நிலையில் சமைத்த உணவு இருந்தால் அதிலும் தர்ப்பை புல்லை போட்டு வைக்கவும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.