பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவதீ இட ஒதுக்கீடு செல்லும்- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
1 min read
10 percent reservation for economically backward will go- Supreme Court verdict
7.11.2022
பொருளாதாரத்தில் பின் தங்கியவருக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
10 சதவீத இடஒதுக்கீடு
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை ஒன்றிய அரசு அறிவித்ததற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.
குறிப்பாக 50 சதவீத இட ஒதுக்கீடு முறை என்ற சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிராக பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை அமைவதாக கூறி தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது
பொருளாதாரத்தில் பின் தங்கியவருக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் மூன்று நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு அளித்துள்ளனர். நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம்.திரிவிவேதி, ஜே.பி பார்திவாலா ஆகிய 3 பேரும் இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளனர்.
இந்த தீர்ப்பை பாரதீய ஜனதா, காங்கிரஸ் வரவேற்று உள்ளது.