தபால் துறை மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்
1 min read
Digital Survival Certificate by Post Department
8.11.2022
தபால் துறை மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
உயிர்வாழ் சான்றிதழ்
மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழ் அளிப்பதில் உள்ள சிரமங்களை போக்கும் வகையில் ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் ஓய்வூதியதாரர்களின் வீடுகளுக்கே சென்று பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக சேவை கட்டணமாக தபால்காரரிடம் ரூ.70 செலுத்த வேண்டும். இந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உன்ன அஞ்சலகம், அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ளலாம். மேலும் https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx என்ற இணைய தள முகவரி மூலமோ, அல்லது Postinfo செயலியை பதிவிறக்கம் செய்து சேவை கோரிக்கையை பதிவு செய்யலாம். மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மட்டுமின்றி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களும் இந்த வசதியை பயன்படுத்தி தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், PPO எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.
எனவே ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப் பாளர் சித்ரா கேட்டுக்கொண்டுள்ளார்.