மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், கவர்னர் தமிழிசை திடீர் சந்திப்பு
1 min read
Governor Tamilisai has a surprise meeting with Union Home Minister Amit Shah
8.11.2022
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜான் சந்தித்து பேசினார்.
தமிழிசை சவுந்தரராஜன்
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். 15 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது. தெலுங்கானா சட்டசபையில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கான ஆட்சேர்ப்பு மற்றும் பல்கலைக்கழகங்களில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதை கருத்தில் கொண்டு ஆட்சேர்ப்பு வாரியம் குறித்த மசோதா உருவாக்கப்பட்டது.
இதற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சில ஆட்சேபனைகள் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மசோதாக்கள் இன்னும் கவர்னர் ஒப்புதலைப் பெறவில்லை. இந்த நிலையில் மத்திய மந்திரி அமித்ஷாவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசியது தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த சந்திப்பு வழக்கமான சந்திப்பு தான் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.