July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

சயனைடை விட 6,000 மடங்கு விஷம்.. உலகின் கொடிய விஷமுள்ள தாவரம்

1 min read

6,000 times more poisonous than cyanide.. The world’s deadliest poisonous plant

14/11/2022
லண்டன் பூங்காவில் சயனைடை விட 6,000 மடங்கு விஷம்.. உலகின் கொடிய விஷமுள்ள தாவரம் வளர்க்கப்பட்டது.

விஷ தாவரம்

ஆமணக்கு வகையை சேர்ந்த ரிசினஸ் கம்யூனிஸ் என்றழைக்கப்படும் செடி, உலகின் ‘கொடிய’ விஷமுள்ள தாவரமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த செடியில் உள்ள சில பொருட்கள் கொடிய சயனைடை விட 6,000 மடங்கு ஆற்றல் வாய்ந்தது. உலகின் மிக நச்சு தாவரம் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்தின் கோல்வின் பேவில் உள்ள குயின் கார்டன்ஸ் பூங்காவில் ‘ரிசினஸ் கம்யூனிஸ்’ செடி இருப்பது தெரியவந்துள்ளது.
குயின் கார்டன்ஸ் பூங்காவில் வளர்க்கப்படும் செடிகளுக்கு நடுவே அசாதாரணமான புதிய வகை செடி இருப்பதை அங்குள்ள ஒரு பெண்மணி கண்டார்.உடனே அவர் அங்குள்ள பணியாளர்களிடம் இது குறித்து கேட்டுள்ளார். அவர்கள் இதை ஆமணக்கு செடி எனக் கூறியுள்ளனர்.அந்த பெண் செடியை தனது மொபைல் கேமராவில் படம்பிடித்து இணையத்தில் அதை குறித்த தகவல்களை பார்த்துள்ளார். அதன் பின் தன்னுடைய கணவருக்கும் அந்த தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன் பின் அவருடைய கணவர் இந்த செடியில் உள்ள ஆபத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த தாவரங்களை கையுறைகளால் கையாள வேண்டும், அவற்றின் விதைகள் மற்றும் விதைகளின் நுகர்வு மிகவும் ஆபத்தானது என்று அவர் கூறினார்.
பொதுமக்கள், குழந்தைகள் செல்லப்பிராணிகள் உலா வரும் பூங்காவில் இத்தகைய விஷச்செடி இருப்பது ஆபத்து என்பதை உணர்ந்துகொண்டார். பின் அதை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செடி இருக்கும் பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.