சென்னையில் தவறான சிகிச்சையால் கால் இழந்த கால்பந்து மாணவி பரிதாப சாவு
1 min read
Football student who lost her leg due to wrong treatment in Chennai dies
15.11.2022
தவறான அறுவை சிகிச்சையால் கால் இழந்த கால்பந்து வீராங்கனையான மாணவி அரசு ராஜூவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மாணவி
சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் 17 வயது மாணவி பிரியா. இவர் கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைந்துவந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த இவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்ச்சியும் பெற்று வந்தார்.
சமீபத்தில் பயிற்ச்சியின் போது மாணவிக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்து.
அறுவை சிகிச்சை
இதனை தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி தனது வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். ஆனால் பிரியாவுக்கு காலில் வலி குறையவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் சிகிச்சைக்காக மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கால் அகற்றம்
அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் அடங்கி குழுவினர் செய்த பரிசேதனையில், காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அறுவை சிகிச்சை மூலம் காலை அகற்ற வேண்டும். இல்லை என்றால் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர், மகளை காப்பாற்ற வேறு வழியில்லாமல் காலை அகற்ற அவர்கள் சம்மதித்தனர். இதனை தொடர்ந்து கால்பந்து வீராங்கனையின் கால்களை மருத்துவர்கள் அகற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மருத்துவர்களின் அலட்சிய போக்கு மற்றும் தவறான சிகிச்சை முறையே தங்கள் மகள் காலை இழக்க காரணம். அந்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தங்களின் மகளின் வாழ்வாதாரம் கருதி அரசு வேலை அமைத்து தரவேண்டும் என்று பெற்றோர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிகைக்கை விடுத்திருந்தனர்.
டாக்டர் மீது நடவடிக்கை
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது மாணவிக்கு உள்ள காயம் சரியான உடன், பெங்களூருவில் இருந்து செயற்கை கால் வாங்கி பொருத்தப்படும் என்றும், அந்த மாணவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மருத்துவக்குழு அளித்துள்ள விளக்கத்தின் அடிப்படையில் மாணவிக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
சாவு
இந்நிலையில், ராஜீவ் காந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீரங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பணியிடை நீக்கம்
இந்த நிலையில் அந்த மாணவிக்குக் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த மருத்துவர்கள் மீது உரிய நடவ்டிக்கை எடுக்கப்படும் எனவும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது உடலை மாணவியின் பெற்றோரிடம் ஒப்படந்ததனர்.
போராட்டம்
அப்போது அங்கிருந்து வீராங்கனை பிரியாவின் நண்பர்கள் அவரது உடலை கொண்டு செல்லும் வாகனத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவரை கைது செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். இதனால் மருத்துவமனை முன்பு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
மா.சுப்பிரமணியன் பேட்டி
இந்த நிலையில் கால்பந்து வீரங்கனை பிரியா உயிரிழப்பு குறித்து விளக்கம் அளித்த மா.சுப்பிரமணியன் கூறியதாவது;-
முதலில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்த மாணவி பிரியாவை வேறு மருத்துவமனைக்கு அனுப்பியது ஏன் என விசாரிக்கப்படும். என்ன தவறுகள் நடந்துள்ளது என்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், கால்பந்து வீரங்கனை பிரியா உயிரிழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு.சிகிச்சையின்போது ரத்த நாளங்கள் பழுதானதால் பிரியாவில் உடல்நிலை பாதிப்பு.சிகிச்சையின் போது ஈரல்,இதயம் என உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டன. ரத்த நாளங்களில் ஏற்பட்ட பாதிப்பால் ரத்த ஓட்டம் நின்றுள்ளது. மூட்டு அறுவை சிகிச்சைக்காக போடப்பட்ட கட்டு காரணமாக வலி ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் காலில் போடப்பட்ட கட்டு அழுத்தமாக போடப்பட்டதால் பாதிப்பு . அறுவை சிகிச்சை செய்த 2 மருத்துவர்கள் கவன குறைவால் வீராங்கனை மரணம் . 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம்.மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும்.மருத்துவர்கள் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு.
இவ்வாறு அவர் கூறினார்.