கல்குவாரிக்கு எதிராக செல்லக்குமார் எம்.பி. விடிய விடிய போராட்டம்
1 min read
Chellakumar MP against Kalkwari. A struggle at dawn
15.11.2022
கல் குவாரிகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிருஷ்ணகிரி எம்.பி. செல்லகுமார் இரவு முழுவதும் பொதுமக்களோடு படுத்து உறங்கி போராடினார்.
கல்குவாரி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கொரட்டகிரி கிராமத்தில் கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளில் இருந்து வெளியேறும் லாரிகளால் சாலைகள் சேதம் அடைந்து வருவதாகவும், அவ்வப்போது விபத்து நடப்பதாகவும், வீடுகள், விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக கொரட்டகிரி கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தற்போது கிராமத்தை காலி செய்து, கொரட்டகிரி அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி எம்பி செல்லகுமார், கல்குவாரிகளுக்கு எதிராக போராடி வரும் பொதுமக்களை சந்தித்து, தமது ஆதரவை தெரிவித்தார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், போராட்ட களத்தில் கிராம மக்கள் உடன் தரையில் படுத்து உறங்கினார். விடியவிடிய அங்கே படுத்து போராடிய கிருஷ்ணகிரி எம்பி.யின் இந்த செயல் கிராம மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.