ராமேசுவரம் மீனவர்களின் நாட்டுப்படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியது
1 min read
A Sri Lankan Navy patrol boat collided with the Rameswaram fishermen’s country boat
26.11.2022.
ராமேசுவரம் மீனவர்களின் நாட்டுப்படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியது.
ராமேசுவரம் மீனவர்கள்
ராமேசுவரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் நேற்று இரவு மீன்பிடித்து கொண்டிருந்தனர். அங்கு ரோந்து கப்பல் ஒன்றில் வந்த இலங்கை கடற்படையினர், இந்த நாட்டுப் படகு மீது வேகமாக மோதியுள்ளனர். இதில் மீனவர்களின் படகின் பின்பகுதி பலகைகள் உடைந்து சேதமானது.
இதனால் படகினுள் கடல் நீர் புகுந்து படகானது மூழ்கத் தொடங்கியுள்ளது. இதனால் செய்வதறியாமல் திகைத்த மீனவர்கள், ராமேசுவரத்தில் உள்ள மற்ற மீனவர்களுக்கு காப்பாற்றக் கோரி தகவல் தெரிவித்துள்ளனர்.
அதை தொடர்ந்து ராமேசுவரம் துறைமுகபகுதியில் இருந்து நாட்டுப்படகு ஒன்றில் விரைந்து சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகையும், அதிலிருந்து 4 மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டு கடற்கரைக்கு அழைத்து வந்தனர்.