June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

மின்இணைப்புடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்- அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

1 min read

Special camp to link Aadhaar with electricity in Tamil Nadu- Minister Senthil Balaji informs

26.11.2022
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின்இணைப்பு

மின்சாரக் கட்டணம் செலுத்துகிறவர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஆதார் எண்ணை இணையத்தளத்தின் வழியாக இணைப்பது அவசியமாகிறது. ஏற்கனவே 100 யூனிட் இலவச மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த உத்தரவு கடந்த 15-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.ஆதார் கார்டு என்பது நாட்டு மக்களின் அடையாளமாக மட்டுமின்றி அரசு திட்டங்கள், மானியங்களில் முறைகேடுகளைத் தடுக்கும் ஆயுதமாகவும் மாறி இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும் நாளை மறுநாள் முதல் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் .பண்டிகை தினங்கள் தவிர, ஞாயிற்றுகிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 31ம் தேதி வரை பொதுமக்கள் மின்கட்டணத்தை ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி செலுத்தலாம் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *