May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

டிஜிட்டல் பற்றி இந்தியாவிடம் இருந்து நிறைய கற்க வேண்டும்- ஜெர்மனி தூதர் பேச்சு

1 min read

India has a lot to learn about digital – German ambassador’s speech

1.12.2022
டிஜிட்டல் மயம் என வரும்போது இந்தியாவிடம் இருந்து ஜெர்மனி நிறைய கற்று கொள்ள வேண்டும் என அந்நாட்டு தூதர் பேசியுள்ளார்.

ஒப்பந்தம்

இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே ரூ.8,480 கோடி மதிப்பிலான வலுவான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் இடையே, பசுமையான மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான நட்புறவு முன்னேற்றத்தின் பின்னணியாக இந்த திட்டங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன என ஜெர்மனி தூதரகம் தெரிவித்து உள்ளது.

இதனை முன்னிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெர்மனி தூதரான டாக்டர் பிலிப் ஆக்கர்மேன் கூறியதாவது:-

இந்தியாவிடம்..

டிஜிட்டல் மயம்பற்றி கூறுவதென்றால், நாம் (ஜெர்மனி) இந்தியாவிடம் இருந்து நிறைய கற்று கொள்ள முடியும். மூன்றரை மாதங்களாக நான் இந்தியாவில் இருக்கிறேன். நாடு முழுவதும் டிஜிட்டல் மயம் இழைந்தோடி இருக்கும் விதம் கண்டு ஆச்சரியமடைந்து போயுள்ளேன். தங்களது வாழ்க்கையில் மக்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் விதம் என்று எடுத்து கொண்டால், நாம் (ஜெர்மனி) இன்னும் பிற்பட்டு இருக்கிறோம். டிஜிட்டல்மயம் ஆவதற்கான ஊக்குவிப்பு பணிகளை எந்தளவுக்கு இந்தியா மேற்கொண்டு உள்ளது என்பது பற்றி நாங்கள் ஆழ்ந்து மற்றும் மிக தீவிரமுடன் உற்றுநோக்குவோம்,
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.