June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

அசாமில் செங்கல் சூளை விபத்தில் 5 பேர் சாவு

1 min read

5 killed in brick kiln accident in Assam

3.121022
அசாமில் செங்கல் சூளை புகைபோக்கி இடிந்து விழுந்ததில் 5 பேர் இறந்தனர்.

செங்கல் சூளை

அசாமின் கச்சார் மாவட்டத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில், புகைபோக்கி இடிந்து விழுந்ததில் 12 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர்.
இதுபற்றி கச்சார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நுமல் மஹத்தா கூறியதாவ:-

சில்சார் நகரத்திலிருந்து சுமார் 29 கிமீ தொலைவில் உள்ள கலயான் பகுதியில் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது. காயமடைந்த மேலும் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் வறுினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.