அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
1 min read
Postponement of Anna University Semester Exams
சென்னை,டிச.10-
9.12.2022
நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செமஸ்டர் தேர்வு
மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புயல் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருப்பதால் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நடைபெற இருந்த டிப்ளமோ தேர்வுகள் ஓத்த்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 17ம் தேதி நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
விடுமுறை
இந்தநிலையில் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர்,வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.