கல்லூரி நிகழ்ச்சியில் புர்கா அணிந்து நடனமாடிய மாணவர்கள் சஸ்பெண்டு
1 min read
Students who danced wearing burqas in college program suspended
9.12.202
கல்லூரியில் மாணவர் சங்க துவக்க விழா நடைபெற்றது. இதில் இடம் பெற்ற நிகழ்ச்சியில் புர்கா அணிந்து நடனமாடிய மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
கல்லூரி விழா
கர்நாடக மாநிலம் மங்களூருவின் வமன்ஜூரில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மாணவர் சங்க துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது 4 மாணவர்கள் நிகழ்ச்சி மேடையில் பாலிவுட் பாடலுக்கு நடனமாடினர். இஸ்லாமிய மத பெண்கள் அணியும் மத உடையான புர்கா அணிந்த 4 மாணவர்களும் மேடையில் ஏறி பாடலுக்கு நடனமாடினர்.
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த 4 மாணவர்களும் புர்கா அணிந்து நடனமாடுவதை மேடைக்கு கீழே இருந்த மாணவ/மாணவிகள் ஆரவாரமாக கொண்டாடினர். இந்த நடனம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது
சஸ்பெண்டு
இந்நிலையில், புர்கா அணிந்து மாணவர்கள் நடனமாடியது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் நடனமாடிய 4 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்துள்ளது. அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் இந்த நிகழ்ச்சி இல்லை என்று விளக்கம் அளித்துள்ள கல்லூரி நிர்வாகம், நடனத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் என்றும் சமூகம், கல்லூரியில் உள்ள அனைவருடைய மத நல்லிணக்கத்திற்கு தீங்கு இழைக்கும் எந்த நடவடிக்கையையும் நிர்வாகம் ஆதரிக்காது’ என தெரிவித்துள்ளது.