திருவண்ணாமலை அருகே மனைவி, 4 குழந்தைகளை வெட்டி கொன்று விவசாயி தற்கொலை
1 min read
A farmer committed suicide by killing his wife and 4 children near Tiruvannamalai
13.12.2022
திருவண்ணாமலை அருகே மனைவி மற்றும் 4 குழந்தைகளை வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார். மதுபோதையில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
விவசாயி
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஒரவந்தவாடி ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 40) விவசாயி. இவரது மனைவி வள்ளி (35). இந்த தம்பதியின் மகள்கள் சௌந்தர்யா (19) திரிஷா (15) மோனிஷா (14) பூமிகா (9) தனியாஸ்ரீ (4) மகன் சிவசக்தி (6).
இவர்களில் முத்த மகள் சௌந்தர்யா கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுக்கப்பட்டு கணவர் வீட்டில் வசிக்கிறார்.
மனைவியுடன் தகராறு
பழனி-வள்ளி தம்பதி தங்களது 5 குழந்தைகளுடன் வசித்து வந்தனர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பழனி விவசாயம் செய்து வந்துள்ளார். விவசாயி பழனிக்கு கஞ்சா மற்றும் மதுப்பழக்கம் இருந்துவந்தாக கூறப்படுகிறது. இதனால் தினந்தோறும் போதையில் வீட்டுக்கு வந்து தனது மனைவியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கமாக இருந்துள்ளார். மேலும் அவருக்கு கடன் பிரச்சனையும் இருந்துள்ளது. இதனாலும் தம்பதிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தாக கூறப்படுகிறது.
இந்த பகுதியில் வசிக்கும் வள்ளியின் தாய் ஜானகி அவ்வப்போது சண்டையை தடுத்து சமரபப்படுத்தி வந்துள்ளார்.

கொலை
கடந்த திங்கட் திழமை இரவு கஞ்சாபோதையில் வீடு திரும்பிய பழனி குடும்பத்துடன் உணவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை ஜானகி பேரக்குழந்தைகளை பார்க்க வழக்கம்போல பழனி வீட்டுக்கு வந்துள்ளார் அப்போது வீடடின் கதவு திறந்துகிடந்தது. இதனால் அவர் அதிர்ச்சிய அவர் வீட்டின் உள்ளே சென்று பார்ததபோது விவசாய பழனி தூக்கில் சடலமாக தொங்கிக்கொண்டிருப்பது தெரியவந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஜானகி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் மற்றவர்களை தேடி வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ஒரே அறையில் வள்ளி திரிஷா மோனிஷா பூமிகா தனியாஸ்ரீ சிவசக்தி ஆகிய 5 பேரும் கழுத்து மற்றும் தலையில் கொடுவாளால் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
பூமிகா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதுகுறித்து கிராம பொதுமக்கள் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் ஒன்றியக்குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தகவல் அறிந்த திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சிகிச்சை
முதற்கட்டமாக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பூமிகாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பூமிகா ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
பின்னர் சடலமாக கிடந்த பழனிஇ வள்ளி மற்றும் குழந்தைகளின் சடலங்களைமீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
போதையில்…
காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் பழனி தனது மனைவியுடன் அடிக்கடி குடும்ப தகராறில் ஈடுபட்டு வந்தாக தெரிகிறது. இதேபோல் இரவு போதையில் தகராறு செய்துவிட்டு அதன்பின்னர் உணவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றதும் தெரியவந்துள்ளது நள்ளிரவில் தூக்கத்திலிருந்து எழுந்த அவர் கடும் அதிர்ச்சியடைந்து தூங்கிக்கொண்டிருந்த மனைவி மற்றும் குழந்தைகளை கொடுவாளால் சரமாரி வெட்டி கொலை செய்துள்ளார் துடிக்க துடிக்க அவர்களை கொலை செய்த நிலையில் தனது வீட்டில் உள்ள அறைக்குள் சென்று அவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்துகிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து திருவண்ணாமலை கிராமிய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக கஞ்சா மற்றும் மதுவுக்கு அடிமையானதால் விவசாயி பழனி மனைவியுடன் குடும்ப தகராறில் ஈடுபட்டுவந்ததோடு போதை அதிகமானதால் மனைவி மற்றும் குழந்தைகள் உள்பட 5 பேரை வெட்டிக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகததையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்றுவந்த பூமிகா மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு படத்தில் இறந்து இருப்பர் ஜானகி என்று உள்ளது. அது வள்ளி ஆகும்.