உதயநிதி ஸ்டாலின் 14-ம் தேதி அமைச்சராகிறார்
1 min read
Udhayanidhi Stalin becomes minister on 14th
12.12.2022
சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி தமிழக அமைச்சராக வரும் 14-ம் தேதி பதவியேற்கிறார் என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின்
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதியை அமைச்சராக்க கவர்னர்க்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை அடுத்து டிசம்பர் 14-ம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார் உதயநிதி. வருகிற 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் என கவர்னர் மாளிகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தலைமைச்செயலகத்தில் உதயநிதி ஸ்டாலினுக்காக தனி அறை தயாராகி வருகிறது. நாளை இரவுக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.