திருப்பதிக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றார்
1 min read
Actor Rajinikanth went to Tirupati
14.12.2022
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்றார்.
ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் 12-ம் தேதி தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
இந்தநிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் திருப்பதிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை அதிகாலை சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் திருப்பதி வந்துள்ளார் என செய்தி அறிந்த ரசிகர்கள் அங்கு குவியத்தொடங்கி உள்ளனர்.