சொத்துக்குவிப்பு வழக்கில் இருநது அமைச்சர் கீதாஜீவன் விடுவிப்பு
1 min read
Exonerated minister Geethajeevan in asset embezzlement case
14/12/2022
சொத்துக்குவிப்பு வழக்கில் இருநது அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அவரது குடும்பத்தினர் விடுவிக்கப்படுவதாக தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கீதாஜீவன்
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏவும் அமைச்சர் கீதாஜீவனின் தந்தையுமான என்.பெரியசாமி மீது 2003-ம் ஆண்டு அதிமுக ஆட்சிகாலத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி எம்.எல்.ஏவாக இருந்த என்.பெரியசாமி வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 31 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது பஞ்சாயத்து தலைவராக இருந்த கீதா ஜீவன் உட்பட அவரது குடும்பத்தினர் மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
விடுவிப்பு
இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குருமூர்த்தி இன்று தீர்ப்பு அளித்தார். அதில், குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்படாததால் அமைச்சர் கீதாஜீவன், அவரது சகோதரர் ஜெகன், உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.
வெற்றி
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதாஜீவன், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக ஆட்சியில் எங்கள் குடும்பத்தினர் மீது வழக்கு போடப்பட்டது. 21 ஆண்டுகளுக்கு பின்னர் நீதி கிடைத்துள்ளது. இது நீதிக்கும் நியாயத்திற்கும் கிடைத்த வெற்றி” என்று தெரிவித்தார்.