வாரணாசியில் ‘காசி தமிழ் சங்கமம்’ நாளை நிறைவு பெறுகிறது
1 min read
Kasi Tamil Sangam’ concludes tomorrow in Varanasi
15.12.2022-
வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நாளை நிறைவு பெறுகிறது.
காசி சங்கமம்
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி கடந்த மாதம் நவம்பர் 17-ந் தொடங்கியது. இதனை பிரதமர் மோடி 19-ந் தேதி தொடங்கி வைத்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட சுமார் 2,500 பேர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவில் உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் முன்னிலை வகிக்கிறார். ஒன்றிய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இவர்களுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி, எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
காசிக்கும், தமிழகத்திற்கும் இடையே, தொன்மையான நாகரிக பிணைப்பையும், பல நுாற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக, இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் பங்கேற்க, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட, 12 விரைவு ரெயில்களில், இதற்காக ஒதுக்கப்பட்ட, 36 பெட்டிகளில் மொத்தம், 2,592 பேர் பயணம் செய்துள்ளனர் என, தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.