அரசின் நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
1 min read
Aadhaar Number Mandatory to Get Govt Welfare Schemes: Tamil Nadu Govt Notification
16.12.2022
அரசின் பல்வேறு வகையான நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆதார் எண்
தமிழக அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அண்மையில் மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை தங்களது ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் பணி தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அரசின் பல்வேறு வகையான நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசின் நிதித்துறை அறிவித்துள்ளது.