ரூ.19.84 கோடி செலவில் புதிய கட்டடங்கள்; முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
1 min read
New buildings at a cost of Rs.19.84 crore; Inaugurated by the Prime Minister
20.12.2022
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.19.84 கோடி செலவில் புதிய கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
கட்டிடங்கள்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 19 கோடியே 84 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் செலவில் மாவட்ட வருவாய் அலுவர்கள் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம், வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு கட்டிடம் மற்றும் வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக இந்த கட்டடங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வான 18 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் முதல்-அமைச்சர் வழங்கினார்.