May 24, 2024

Seithi Saral

Tamil News Channel

மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டம் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

1 min read

The project to install transponders in fishing barges was launched by Prime Minister M. K. Stalin

30.12.2022
மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர் கருவிகள் பொருத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

டிரான்ஸ் பாண்டர்

தமிழக அரசின் மீன்வளத்துறை சார்பில் அவசர காலங்களில் மீனவர்கள் தகவல்களை பரிமாறிக் கொள்ள ஏதுவாக நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் 18 கோடியே 1 லட்சம் ரூபாய் செலவில் 4,997 மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர் கருவிகளை பொருத்தும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தை தொடங்கி வைத்ததன் அடையாளமாக சென்னை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 10 மீன்பிடி விசைப்படகு உரிமையாளர்களுக்கு டிரான்ஸ்பாண்டர் கருவிகளை முதல்-அமைச்சர் இன்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் இறையன்பு, மீன்வளத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.