December 8, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை எப்போது? பழனிவேல் தியாகராஜன்பதில்

1 min read

When will Rs.1,000 right amount be given to women in Tamil Nadu?

31.12.2022
தமிழகத்தில் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை எப்போது? என்பது குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் ராஜன் விளக்கம் அளித்தார்.

பெண்களுக்கு ரூ.1000

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வழங்கிய 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றுப்பட்டுவிட்டதாக தி.மு.க-வினர் கூறிவருகிறார்கள். ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட சில முக்கியமான வாக்குறுதிகளை தி.மு.க அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. அதனால், தி.மு.க அரசுக்கு எதிரான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்துவருகிறார்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்கிற தி.மு.க-வின் வாக்குறுதி சட்டமன்றத் தேர்தலின்போது பெண் வாக்காளர்களைப் பெரிதாகக் கவர்ந்தது. தி.மு.க வெற்றிபெற்றவுடன், ரூ.1,000 உரிமைத்தொகையை தமிழக அரசு வழங்கும் என்று குடும்பத் தலைவிகள் எதிர்பார்த்தனர். ஆனால், இதுவரை அது வழங்கப்படவில்லை. எதிர்க் கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து எழுப்பிவருகின்றனர்.

இந்த நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் “மகளிருக்கு உரிமை தொகை தரும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது.2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார்” என கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.