மத்திய பிரதேசத்தில் கோவில் மீது விமானம் மோதியதில் விமானி பலி
1 min read
Pilot killed as plane crashes into temple in Madhya Pradesh
6.1.2023
மத்திய பிரதேசத்தில் கோவில் மீது விமானம் மோதிய விபத்தில் விமானி உயிரிழந்தார். ஒருவர் படுகாமய் அடைந்தார்.
விமான விபத்து
மத்தியபிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலின் மீது இன்று ஒரு விமானம் மோதி விபத்துக்கு உள்ளது. இந்த விபத்தில் விமானம் முற்றிலும் சேதம் அடைந்து. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்து ரேவா போலீசார் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர். இந்த பயங்கர விபத்தில் விமானி உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டார். உடனடியாக அவரை சிகிச்சைக்கான ரோவ பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக ரேவா எஸ்.பி நவ்நீத் பாசின் தெரிவித்துள்ளார்.