காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து, 3 வீரர்கள் மரணம்
1 min read
Army vehicle overturns in Kashmir, 3 soldiers killed
11.1.2023
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே மாச்சலில் ரோந்து பணியின்போது ராணுவ வாகனம் கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்தனர்.
ராணுவ வாகனம்
ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் மாச்சல் என்ற பகுதியில் ராணுவ வாகனத்தில் சென்றபடி இன்று வழக்கமான ரோந்து பணிகளை ராணுவ வீரர்கள் மேற்கொண்டனர். ஒரு இளநிலை அதிகாரி உள்பட மூன்று ராணுவ வீரரகள் இதில் பயணித்தனர். இவர்கள் சென்ற வாகனம், பனியில் சருக்கி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த மூவரும் உயிரிழந்ததாகவும், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. இதே பகுதியில் இதே போன்ற நிகழ்வு நடந்து இரண்டு மாதங்கள்கூட ஆகாத நிலையில், இந்த விபத்து நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.