ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைதேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டி
1 min read
Senior Congress leader EVKS Ilangovan is contesting in the Erode East Assembly by-election
23/1/2023
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.
இளங்கோவன்
மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட உள்ளார்.
சென்னையில் 2 நாட்களாக ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
ஆனால் ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் போட்டியிட விரும்பவில்லை என்றும், தனது இன்னொரு மகனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குமாறும் கூறியிருந்தார். ஆனால் கட்சி மேலிடம் இளங்கோவனுக்கு சீட் கொடு்த்துள்ளது.