பிரதமர் மோடி தலைமையில் 29-ந் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டத்தி்ல் பட்ஜெட் குறித்து ஆலோசனை
1 min read
Union Cabinet meeting chaired by Prime Minister Modi on 29th will discuss the budget
23.1.2023
பிரதமர் மோடி தலைமையில் வருகிற 29ந் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
அமைச்சரவை கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் வருகிற 29ந் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்பு அறிவுரைகளை வழங்கலாம் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி. 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த ஆண்டு ஒன்பது மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுடன், அடுத்த ஆண்டு மக்களவைக்கான பொதுத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மக்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் இந்த பட்ஜெட் அறிவிப்பில் வெளியாகலாம் எனத்தெரிகிறது.