நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இளையராஜா ஒருநாள் கூட பங்கேற்கவில்லை
1 min read
Ilayaraja did not even participate in the winter session of Parliament
24.1.2023
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இளையராஜா ஒருநாள் கூட மாநிலங்களவைக்கு செல்ல வில்லை என வருகை பதிவு தொடர்பான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளையராஜா
மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. 13 நாட்கள் வரை நடைபெற்றன. இந்த கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினர்களின் வருகை பதிவு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, நியமன எம்.பி.க்களில் தடகள வீராங்கனை பி.டி.உஷா 13 நாட்கள் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். ஒரு விவாதத்தில் கலந்துகொண்டார். வீரேந்திர ஹெக்டே 5 நாட்களும், விஜயேந்திர பிரசாத் 2 நாட்களும் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர்.
கலந்து கொள்ளவில்லை
தமிழ்நாட்டிலிருந்து நியமிக்கப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா கூட்டத்தொடரின் ஒருநாள் கூட கலந்து கொள்ளவில்லை. அவருடைய வருகைப்பதிவு பூஜ்ஜியமாக உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூட்டப்பட்ட போது முதல் நாளான மாநிலங்களவையில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட நியமன எம்.பி.க்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டு இருந்தநிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.