June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

1 min read

Free Coaching for Govt Competitive Exams in TenkasiFree Coaching for Govt Competitive Exams in Tenkasi

24.1.2023
தென்காசி மாவட்டத்தில் அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் .ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

இலவச பயிற்சி

தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சாலை ஆய்வாளர் பணிக்கு 761 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 11.02.2023 ஆகும்.
மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/
என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளவும். இத்தேர்வுக்கு தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டவுள்ள இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர். ஆகிய பணியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக வருகிற 25.01.2023 ஆம் தேதி முதல் அலுவலக வளாகத்தில் நடத்தப்படவுள்ளது.
இங்கு நடத்தப்படும் ஒவ்வொரு போட்டித் தேர்வுகளுக்கும் முன்னணி தனியார் நிறுவனங்களில் பயிற்சி அளிக்கும் வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வாரம் ஒரு மாதிரி தேர்வு நடைபெறும்.
எனவே தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வலர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *