நடிகர் ரஜினியின் புகைப்படத்திற்கு திடீர் தடை
1 min readSudden ban on actor Rajinikanth’s photo
28.1.2023
ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் அவரது பெயர், புகைப்படம், குரலை பயன்படுத்த தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரஜினி பெயர்
நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் இளம் பாரதி வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பல தளங்களில் பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அவரது அனுமதியின்றி பயன்படுத்துகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இதனால் ரஜினியுடைய பெயர், புகைப்படம், குரலை ஒப்புதல் இன்றி வர்த்தக ரீதியாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.