செருப்பு மாலை அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை
1 min readAn independent who came to file nominations wearing a sandal garland
31.1.2023
ஈரோடு கிழக்கு தொகுதியில் செருப்பு மாலை அணிந்து சுயேச்சை ஒருவா வேட்புமனுதாக்கல் செய்ய வந்தார்.
செருப்பு மாலை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று ஏற்கனவே மூன்று சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் 4-வதாக கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த நூர்முகமது (63) என்பவர் செருப்பை மாலையாக கழுத்தில் அணிந்து கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.
அவர் கூறியதாவது:-
நான் இதுவரை எம் .எல். ஏ, எம். பி. வார்டு கவுன்சிலர் என 40 முறை தேர்தலில் நின்று உள்ளேன். தற்போது 41வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக கழுத்தில் செருப்பு மாலை அணிந்து வந்துள்ளேன். மக்களுக்காக நாயாக உழைத்து அவர்கள் கால்களுக்கு செருப்பாக இருப்பேன் என்பதை உணர்த்துவதற்காக கழுத்தில் செருப்பு மாலை அணிந்து வந்துள்ளேன். மக்கள் உண்மையிலேயே தங்களுக்காக யார் உழைப்பார்கள் என்று தெரிந்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் பணத்துக்காக வாக்களிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் என்றார்.