May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

மணப்பெண்ணின் தாய், தாத்தா, பாட்டி தீயி்ல் கருகி பலி- இறப்பை மறைத்த திருமணம்

1 min read

Bride’s Mother, Grandfather, Grandmother burnt to death – marriage that hides death

1.2.2023
மணப்பெண்ணின் தாய், தாத்தா, பாட்டி இறந்ததை மறைத்து திருமணம் நடந்தது.

திருமணம்

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பெட் மாவட்டம் ஜொரப்ஹடக் பகுதியை சேர்ந்தவர் சுபாத் லால். இவருக்கு மனைவியும் ஸ்வாதி என்ற மகளும் உள்ளனர். சுபாத் லாலின் பெற்றோரும் அவருடன் வசித்து வந்தனர். இவர்கள் அனைவரும் ஜொரப்ஹட்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
இதனிடையே, ஸ்வாதிக்கு பெங்களூருவில் பணியாற்றி வரும் கவுரவ் என்ற இளைஞருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் ஸ்வாதி குடியிருக்கும் பகுதியில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலையில் உள்ள ஒரு நட்சத்திர மண்டபத்தில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்றது.

தீ விபத்து

மகளின் திருமணத்திற்காக சுபாத் லால் அவரது மனைவி மற்றும் தாத்தா, பாட்டி, குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் தயாராகிக்கொண்டிருந்தனர். அலங்காரம் உள்பட பிற சடங்கு ஏற்பாடுகளுக்காக மண்டத்திற்கு விரைவாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் மண மகள் ஸ்வாதி தனது தோழிகளுடன் மாலை 4 மணிக்கே தனது வீட்டில் இருந்து வெளியேறி மண்டபத்திற்கு சென்றுவிட்டார்.
மகள் ஸ்வாதி மண்டபத்திற்கு சென்ற நிலையில் சுபாத் லால் தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் திருமண மண்டபத்திற்கு செல்ல வீட்டில் தயாராகிக்கொண்டிருந்தார். அப்போது, அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மாலை 6 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பின் 2வது தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மற்றும் 4வது தளத்திற்கு பரவியது.

சாவு

இந்த பயங்கர தீ விபத்தில் 4வது தளத்தில் வீட்டில் இருந்த சுபாத் லால் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிக்கிக்கொண்டனர். தீ வேகமாக பரவிய நிலையில் சுபாத் லால் சிறு காயங்களுடன் தீ விபத்தில் இருந்து தப்பித்தார். ஆனால், சுபாத் லாலின் மனைவி, தாய், தந்தை குடும்ப உறுப்பினர்கள் 2 பேர் என மொத்தம் 5 பேர் தீயில் சிக்கி மூச்சுத்திணறி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட அந்த தீ விபத்தில் சுபாத் லாலின் குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் உள்பட மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். தீ விபத்து ஏற்பட்டு தாய், தாத்தா, பாட்டி உள்பட குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் உயிரிழந்தது தெரியாத ஸ்வாதி மணமேடை ஏறியுள்ளார்.

மறைத்தது

நடந்த சம்பவம் குறித்து மண்டபத்தில் இருந்த ஸ்வாதியின் உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. ஆனால், ஸ்வாதியின் திருமணம் முடியும் வரை நடந்த சம்பவத்தை அவரிடம் தெரிவிக்கக்கூடாது என எண்ணிய உறவினர்கள் சம்பவத்தை மறைத்துள்ளனர். தனது மனைவி, தாய், தந்தை தீயில் கருகி உயிரிழந்ததை நேரில் கண்டு மனமுடைந்த சுபாத் லால் தனது மகள் ஸ்வாதியின் திருமணத்தை பார்த்துவிட வேண்டுமென கனத்த இதயத்துடன் திருமண மண்டபத்திற்கு வந்துள்ளார். நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து சுபாத் லால் மீளாத நிலையில் திருமண சடங்குகளை ஸ்வாதியின் உறவினர்கள் நடத்தினர். தாய், தாத்தா, பாட்டி குறித்து ஸ்வாதி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த நிலையில் அவரை உறவினர்கள் சமாதானபடுத்தினர். பின்னர், சவுரவுக்கும் ஸ்வாதிக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரின் திருமணம் நடைபெற்ற பின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது குறித்தும் தாய், தாத்தா, பாட்டி உள்பட குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் தீ விபத்தில் உயிரிழந்தது குறித்தும் ஸ்வாதியிடம் உறவினர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்டு ஸ்வாதி பேரதிர்ச்சியடைந்தார். மகளின் திருமணம் தடைபட்டுவிடக்கூடாது என்று எண்ணி மனைவி, தாய், தந்தை உயிரிழந்ததை சுபாத் லால் மறைத்த நிகழ்வு நெஞ்சை உலுக்கும் வகையில் இருந்தது. தாய், தாத்தா, பாட்டி உயிரிழந்த சம்பவத்தை கேட்ட ஸ்வாதி பேரதிர்ச்சியடைந்த நிலையில் திருமணம் முடிந்த கையோடு அவர் கண்ணீர் விட்டு அழுத்த நிகழ்வு அனைவரின் மனதையும் உருக்கும் வகையில் இருந்தது. தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.