May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்

1 min read

Popular playback singer Vani Jayaram passes away

4.2.2023
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் அடைந்தார். அவர் உடல் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாணி ஜெயராம்

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம். 78 வயது நிரம்பிய அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று உயிரிழந்தார்.

1945ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி வேலூரில் இசைக்குடும்பத்தில் பிறந்தவர் வாணி ஜெயராம், இவரது இயற்பெயர் கலைவாணி என்பதேயாகும். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

1971ஆம் ஆண்டு குட்டி ௭ன்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அன்று முதல் நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடல்களை பாடி வந்தார். இந்திய திரைப்படப் பாடல்களை பாடியிருந்தாலும் தனி ஆல்பம் மற்றும் பக்திப்பாடல்களை பாடியுள்ளார். “ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி” என்ற சிறப்பு பட்டமும் உள்ளது.
975-ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் அவர் பாடிய பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகியாக தேசிய விருது பெற்றவர் வாணி ஜெயராம்.

தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக 1974ஆம் ஆண்டு தீர்க்கசுமங்கலி ௭ன்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி இயற்றிய மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும் பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடினார்.
அதன் பின்னர் ஏழு சுவரங்களுக்குள், கேள்வியின் நாயகனே, ௭ன்னுள்ளே ௭ங்கும் ஏங்கும் கீதம், யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது, கவிதை கேளுங்கள் கருவில், போன்ற கடினமான பாடல்களை தமிழ்த்திரையுலகில் பதிவுசெய்துள்ளார். இவர் திரையிசை, பாப், கஜல், பஜனை, நாட்டுப்புறப் பாடல்களும் பாடியுள்ளார்.

பல்வேறு மொழி

இவர் தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி ௭ன்றாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி மற்றும் பெங்காளி ௭ன பல இந்திய மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தாக கூறப்படுகின்றது.
சென்னை,
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம்(வயது 78) தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் இவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்து உயிரிழந்தாக கூறப்படுகின்றது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.