May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாட்டில் நாளை முதல் 1-ந் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

1 min read

Chance of moderate rain in Tamil Nadu from tomorrow till 1st

26.2.2023
தமிழ்நாட்டில் நாளை முதல் 1-ந் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மஐா

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில். 27-2-2023 (நாளை) முதல் 1-3-2023 வரை தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும்.
2.3.2023 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.