சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக லட்சுமி நாராயணன் பதவியேற்பு
1 min read
Lakshmi Narayanan sworn in as Additional Judge of Chennai High Court
27.2.2023
சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக லட்சுமி நாராயணன் பதவியேற்றுக்கொண்டார்.
நீதிபதி
கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் கூட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக 8 பேரை நியமனம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. இதில், பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகிய 3 மாவட்ட நீதிபதிகளையும், வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணன், லக்ஷமண சந்திர விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமசாமி நீலகண்டன், கந்தசாமி குழந்தைவேலு, ராமகிருஷ்ணன் ஆகிய 5 வழக்கறிஞர்களையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது.
வழக்கறிஞர்களான விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன், மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டதையடுத்து பிப்ரவரி 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், வழக்கறிஞர் வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணனை சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அண்மையில் உத்தரவிட்டார். இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக வெங்கடாச்சாரி லட்சுமி நாராயணன் இன்று (திங்கட்கிழமை) பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனால் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்கள் 17ஆக குறைந்துள்ளது.