முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
1 min read
Rajinikanth congratulates Prime Minister M. K. Stalin
28.2.2023
நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் இருந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ரஜனிகாந்த் வாழ்த்து
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது:-
எனது இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடன் இருந்து மக்கள் சேவை செய்யவேண்டும் என்று அவரது 70-வது பிறந்தநாளில் மனதார வாழ்த்துக்கிறேன்.
இவ்வாறு வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.