முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் பரிசாக ஒட்டகம்-தொண்டர் வழங்கினார்
1 min read
A camel-volunteer presented to Prime Minister M.K.Stalin as a birthday present
1.3.2023
திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த திமுக தொண்டர் ஒருவர் முதலமைச்சரின் பிறந்த நாளுக்கு ஒட்டகத்தை பரிசளித்தார்.
திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் வாழ்த்து கூறுவதற்கு பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது முதல்-அமைச்சருக்கு பரிசளிப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜாகிர்சா என்ற திமுக தொண்டர் ஒட்டகத்தை அழைத்து வந்திருந்தார்.
இதற்கு முன்பு ஆடு, மாடு என ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவர் முதல்-அமைச்சருக்கு பரிசு அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.