June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி,பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து

1 min read

President, Vice President and Prime Minister wish the Prime Minister M.K.Stalin on his birthday

1.3.2023
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிறந்தநாள் வாழ்த்து

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். அவரின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசியில்அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட செய்தியில் “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைத்திடவும், மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிடவும் வாழ்த்துகிறேன்.” என்று கூறியுள்ளார்.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வெயிட்டுள்ள செய்தியில் “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, நாட்டிற்கு சேவையாற்றிட மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை கிடைத்திட வாழ்த்துகிறேன்.” என்று கூறியுள்ளார்.

மோடி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!”என்று தெரிவித்துள்ளார்.

கவர்னர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “70-வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

அமித்ஷா

ஒன்றிய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அமித்ஷாவிற்கு முதல்-அமைச்சர் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு, பொது வாழ்வில் இன்னும் பல ஆண்டுகள் அவரது பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!”என்று தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.