June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

பாஜக ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகல்-அ.தி.மு.க.வில் இணைகிறார்கள்

1 min read

BJP I.T. Team executives join Koontodu party – ADMK

8.3.2023-
பாஜக ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகினார்கள். அவர்கள் அனைவரும் அதிமுகவில் இணையப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஐ.டி. அணி

பாஜக சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விளங்கியுள்ளனர்.அதன்படி பாஜகவின் சென்னை மேற்கு மாவட்ட ஐடி பிரிவை சேர்ந்த மாவட்ட தலைவர், 2 துணைத் தலைவர்கள், 10 மாவட்ட செயலாளர்கள் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்த அக்கட்சியின் மாநில நிர்வாகிகளான சி.டி.ஆர். நிர்மல் குமார், பி.திலீப் கண்ணன் உள்ளிட்டோர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர்.
விலகிய அனைவரும் அதிமுகவில் இணையப்போவதாக அறிவித்துள்ளனர். தொடர்ந்து நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவது பாஜகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.