குளச்சல் மீன்பிடி துறைமுகத்தின் விரிவாக்கம் தொடர்பாக கலெக்டர் ஆய்வு
1 min read
Collector survey regarding expansion of Kulachal Fishing Port
9.3.2023
கன்னியாகுமரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், குளச்சல் மீன்பிடி துறைமுகம் மற்றும் குறும்பனை கடலோர பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் இன்று (09.03.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அவர் கூறியாவது:-
விரிவாக்கம்
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுகத்தினை விரிவாக்கம்
செய்யப்படும் இடத்தினை இன்று நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே குளச்சல்
துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்கு பக்க அலைத்தடுப்பு சுவரினை சுமார் 600
மீட்டர் நீட்டித்தும், புதிதாக 320 மீட்டர் நீளத்திற்கு கிழக்கு பக்க அலைத்தடுப்பு சுவர் அமைக்கும் பணி, படகு அணையும் தளம் மற்றும் இதர கூடுதல் கட்டமைப்புகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தற்போது, குளச்சல் துறைமுகத்தில் 150
விசைப்படகுகள் 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் நிற்பதற்கு இடவசதி உள்ளது.
விரிவாக்கப் பணிகள் தொடங்கி நிறைவடையும்போது கூடுதலாக விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் நிற்பதற்கு வழிவகை செய்யும்.
அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் லிமிடெட் சுய உதவி ஒருங்கிணைப்பு கூட்டுறவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 30 டன் கொள்ளளவு கொண்ட பனிக்கட்டி தயாரிக்கும் நிலையம் ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது.
தூண்டில் வளைவு
மீன்களை சுகாதார முறையில் கையாளுதல் மற்றும் ஏலம் விடும் வசதிகளோடு மீன் பதப்படுத்தும் மையத்தினையும் ஆய்வு மேற்கொண்டு இந்நிலையத்தினை மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டது.
மேலும், குறும்பனை மீனவர் கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி, படகு அணையும் தளம் மற்றும்
மீன்வலை அமைக்கும் கட்டிடப்பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, இப்பணிகளை விரைந்து முடித்திட மீன்வளத்துறை துணை இயக்குநர்
உள்ளிட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் காசிநாதபாண்டியன், உதவி இயக்குநர்கள் நடராஜன், சிதம்பரம் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.