இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் நிகர நேரடி வரி வசூல் 17 சதவீதம் அதிகரிப்பு
1 min read
Net direct tax collection in India increased by 17 percent in the current financial year
11.3.2023
இந்தியாவில் இந்த ஆண்டு நிகர நேரடி வரி வசூல் 17 சதவீதம் அதிகரித்து ரூ.13.73 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
அதிகரிப்பு
இந்தியாவில் நடப்பு நிதியாண்டில், கடந்த 2022 ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2023 மார்ச் 10-ந்தேதி வரை, நிகர நேரடி வரி வசூல் 17 சதவீதம் அதிகரித்து ரூ.13.73 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது 2022-23 முழு நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட இலக்கில் 83 சதவீதம் ஆகும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பெறப்பட்ட நிகர வரி வசூலை விட இது 16.78 சதவீதம் அதிகமாகும். இந்த வசூல் இந்த நிதிஆண்டிற்கான மொத்த பட்ஜெட் மதிப்பீடுகளில் 96.67 சதவீதம் ஆகவும் நேரடி வரிகளின் மொத்த திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 83.19சதவீதம் ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.