ரயில்வே பெண் ஊழியரை பலாத்காரம் செய்ய முயற்சி: கேரள வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
1 min read
Attempt to rape female railway employee: Kerala youth arrested under Goon Act
11.3.2023
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே பெண் ஊழியரை பலாத்காரம் செய்ய முயன்ற கேரள இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்
ரயில்வே ஊழியர்
தென்காசி அருகே உள்ள பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது பெண் கேட்கீப்பராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி இரவு பணியில் இருந்த போது கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பத்தனாபுரத்தைச் சேர்ந்த அனீஸ் (வயது 27) என்பவர் அவரது அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
இதுகுறித்து தென்காசி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அணீஸ் என்பவரை கைது செய்தனர். அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அனீஸ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட ரயில்வே எஸ் பி செந்தில்குமார், தென்காசி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்படி தென்காசி கலெக்டர் துரை. இரவிச்சந்திரன்,, அனீஸ் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவை நெல்லை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.