July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

காதல் ஜோடியை மிரட்டி கூகுல் பே மூலம் லஞ்சம் வாங்கிய போலீசார் 2 பேர் கைது

1 min read

2 cops arrested for threatening romantic couple and taking bribe through Google Pay

13.2.2023-
படப்பை அருகே காதல் ஜோடியை மிரட்டி கூகுல் பே மூலம் லஞ்சம் வாங்கிய போலீசார் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புகார்

காஞ்சிபுரம் மாவட்டம் சாலமங்கலம் அருகே வாலாஜாபாத் வண்டலூர் சாலையின் ஓரத்தில் நின்றிருந்த காரின் உரிமையாளரை மிரட்டி கூகுள் பே மூலம் பணம் வசூலித்ததாக மணிமங்கலம் காவல்நிலையத்தில் சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த கண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் புகார் அளித்தார்
புகாரின் அடிப்படையில் மணிமங்கலம் போலிசார் நடத்திய விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன

காதலியுடன் வாலிபர்

மணிமங்கலம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலர்களாக பணியாற்றி வருபவர்கள் அமிர்தராஜ்,
மணிபாரதி இவர்கள் இருவரும் மணிமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட படப்பை அடுத்த சாலமங்கலம் அருகே வாலாஜாபாத் வண்டலூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது சாலையின் ஓரத்தில் நீண்ட நேரமாக தனியாக நின்று கொண்டிருந்த காரில் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (30) அவரது காதலியுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்

அங்கு சென்ற காவலர் அமிர்தராஜ் ஏன் ரொம்ப நேரம் இங்கு நிக்குறீங்க யார் இந்த பொண்ணு உன் அப்பா நம்பர் குடு நான் பேசுறேன் என்று மிரட்டியும் உள்ளார்
இதனால் பதட்டம் அடைந்த கிருஷ்ணன் அதெல்லாம் வேண்டாம் சார் எங்களை விட்ருங்க நாங்க போயிட்றோம் என்று கெஞ்சியுள்ளார்
அப்போது அமிர்தராஜ் அப்படியெல்லாம் விட முடியாது ரெண்டு பேரும் ஸ்டேஷன் வாங்க அங்கு உங்களை விசாரிக்க வேண்டும் என்று மிரட்டி உள்ளார்

ரூ.4 ஆயிரம்

இதனால் மேலும் பதட்டமான கிருஷ்ணன் சார் நீங்க என்ன கேட்டாலும் குடுத்துட்றேன் எங்களை விட்ருங்க போதும் என்று கெஞ்சியபோது அப்படியென்றால் 10 ஆயிரம் ரூபாய் குடு விட்டுட்றேன் என்று கூறியுள்ளார் அமிர்தராஜ் அதற்கு என்னிடம் அவ்வளவு இல்லை 5000 தான் உள்ளது 4000 தருகிறேன் சார் என்று கிருஷ்ணன் கூறியுள்ளார்

சரி குடு என்று அமிர்தராஜ் கேட்ட போது கூகுள் பே மூலமாக அனுப்புகிறேன் என்று கிருஷ்ணன் கூறியுள்ளார்
கூகுள் பே என்னிடம் இல்லை என்று கூறி சக காவலர் மணிபாரதி யின் கூகுள் பே எண்ணை குடுத்துள்ளார் அமிர்தராஜ் இங்கிருந்து தப்பித்தால் போதும் என்று 4000 ரூபாயை மணிபாரதியின் கூகுள் பே மூலம் அனுப்பி விட்டு உடனடியாக கிருஷ்ணன் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறையில் அடைப்பு

குற்றங்களை தடுக்க வேண்டிய காவல்துறையினரே தனியாக காரில் இருந்த காதல் ஜோடியை மிரட்டி லஞ்சம் பெற்றது தெரிய வந்த நிலையில் இரண்டு காவலர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காதலர்களை மிரட்டி கூகுள் பே மூலம் காவல்துறையினரே லஞ்சம் வாங்கி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.