June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

காட்டுப்பன்றிக்காக வைத்தமின் வேலியில் சிக்கி மாணவன் பலி-விவசாயி கைது .

1 min read

Student killed by wild boar caught in Viatmin fence-Farmer arrested.

நெமிலி அடுத்த அசநெல்லிகுப்பத்தில் காட்டுப்பன்றியைக்கொல்ல கட்டியிருந்த மின்வேலியில் மின்சாரம் தாக்கி பாலிடெக்னிக் மாணவன் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விவசாயியை கைது செய்தனர் .

மின்சார வேலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாயை சேர்ந்த விக்னேஷ் (வயது 19) பணப்பாக்கம் அருகிலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வந்தார் .
இந்நிலையில் நேற்று இரவு விக்னேஷ் அருகாமையிலுள்ள அசநெல்லிப்குப்பத்தில் நடந்த திருவிழாவை பார்த்துவிட்டு நண்பர்களுடன் பைக் வீடு திரும்பிபோது ,வழியில் இயற்கை உபாதைக்காக வயலோரம் சென்றுள்ளார்.
அப்போது அங்கு காட்டுப்பன்றிகளைக் கொல்ல வைத்திருந்த மின்வேலி தெரியாமல் விக்னேஷ் தொட்டதும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார் .
இதுகுறித்து தகவலறிந்தப் நெமிலிப் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனையடுத்து பன்றியைக்கொல்ல சட்டவிரோதமாக வயல்களில்அமைத்த மின்சாரவேலியில் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தப் போலீஸார் காரணமான விவசாயி வரதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *