புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை
1 min read
Gunfight between security forces and terrorists in Pulwama area
18.3.2023
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
துப்பாக்கி சண்டை
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் மித்ரிகாம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து கூட்டாக அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதற்கு வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனை அடுத்து, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு வீரர்களுக்கும் இடையே அந்த பகுதியில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
அந்த பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வீரர்கள் கொண்டு வந்து உள்ளனர். தொடர்ந்து சண்டை நடந்தது. இதனை காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.