இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 646 ஆக குறைந்தது
1 min read
Daily corona cases in India reduced to 646
21.3.2023
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 646 ஆக குறைந்தது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,071 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இந்நிலையில் நேற்று பாதிப்பு 918 ஆக குறைந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் பாதிப்பு சரிந்துள்ளது. காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 646 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 96 ஆயிரத்து 984 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 435 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 59 ஆயிரத்து 617 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை நேற்றை விட 209 அதிகரித்துள்ளது. அதாவது 6,559 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பால் நேற்று ராஜஸ்தானில் ஒருவர் இறந்துள்ளார். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 1-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,808 ஆக உயர்ந்துள்ளது.