July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

தாம்பரத்தில் இருந்து நெல்லை வழியாக செங்கோட்டைக்கு ரெயில்-மோடி தொடங்கி வைக்கிறார்

1 min read

Rail-Modi inaugurates from Tambaram via Nellai to Sengottai

26.3.2023
தாம்பரத்தில் இருந்து நெல்லை வழியாக செங்கோட்டைக்கு ரெயில் சேவையை வருகிற 8-ந்தேதி ரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
3 நாட்கள்

நெல்லை – தென்காசி இடையே இருந்த மீட்டர் கேஜ் பாதையானது 21.09.2012 அன்று அகலப்பாதையாக மாற்றப்பட்டது. இந்த வழித்தடமானது அகலப்பாதையாக மாற்றப்பட்டு 12 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும் இன்று வரை அந்த வழித்தடத்தில் சென்னைக்கு நேரடி ரெயில்கள் இல்லாத நிலையே இருந்து வருகிறது. இதுதொடர்பாக பயணிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது தாம்பரம் – செங்கோட்டை இடையே வாரத்தில் 3 நாட்கள் இயங்கும் வகையில் புதிய ரெயில் ஒன்று இயக்கப்பட உள்ளது.
செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு நெல்லை வழியாக இயக்கப்படும் இந்த ரெயில் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வருகிற 8-ந்தேதி தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு புறப்பட உள்ள இந்த ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த ரெயில்(16103) தாம்பரத்தில் இருந்து ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய 3 தினங்களிலும் இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டை வந்தடைகிறது. மறுமார்க்கமாக வருகிற 10-ந்தேதி முதல் செங்கோட்டையில் இருந்து திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் வண்டி எண் 16104 என்ற ரெயில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயிலில் சாதாரண இருக்கை கட்டணம் ரூ.240, படுக்கை வசதி கட்டணம் ரூ.435, மூன்றாம் வகுப்பு ஏசிக்கு ரூ.1,150, இரண்டாம் வகுப்பு ஏசிக்கு ரூ.1,575 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செங்கோட்டை – தாம்பரம் மும்முறை ரெயிலானது அம்பை, நெல்லை, விருதுநகர், திருவாரூர், மயிலாடுதுறை விழுப்புரம் வழியாக இயக்கப்பட உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.