June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

1 min read

Hip Bone Arthroplasty at Tenkasi Government Head Hospital

26/3/2023
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
மாற்று அறுவை சிகிச்சை தென்காசி செய்யப்பட்டது. சுமார் ரூ. 2 லட்சத்திற்கு மேல் செலவாக கூடிய இந்த அறுவை சிகிச்சை தென்காசி அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ்இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

இடுப்பு எலும்பு மூட்டு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்குளத்தைச் சேர்ந்த மகரஜோதி (வயது40). இவருக்கு வலது இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது. மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் இந்த பெரிய அறுவை சிகிச்சைகள் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவு டாக்டர், மருத்து வமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில் எலும்பு முறிவு மருத்துவர்கள் மது, முத்துராமன், மயக்கவியல் நிபுணர், மருத்துவர் சுரேஷ் மில்லர் ஆகியோரால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

சுமார் ரூ. 2 லட்சத்திற்கு மேல் செலவாக கூடிய இந்த அறுவை சிகிச்சைதென்காசி அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ்இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

இந்த நபருக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இடது இடுப்பு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை ஏற்கனவே தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளது.

இது பற்றி மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கூறியதாவது:-

வாழ்த்து

தென்காசி மருத்துவமனை யில் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அதிக சிகிச்சை நடைபெறுகிறது. தென்காசி மருத்துவமனையின் சிறப்பான சிகிச்சைக்கு ஒத்துழைப்பு நல்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்து க்களை கூறிக்கொண்டார்.

சுத்தமான சுடு தண்ணீர்

மேலும் நோயாளிகளின் நலன் கருதியும், பாதுகாப்பு கருதியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு காத்திருப்பு அறை தயார் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு இரண்டு இடங்களில் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீரும், சுடு தண்ணீரும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மருத்துவமனையின் பிரதான வாயிலில் செக்யூரிட்டி அலுவலகம் இன்னும் ஒரு வார காலத்திற்குள் ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இணை இயக்குனர் நலப்பணிகள் டாக்டர் பிரேமலதா கூறும் போது, “தென்காசி மருத்துவமனையில் அதிக நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நோயாளிகளின் விகிதத்திற்கு ஏற்ப மருத்துவர்கள், பணி யாளர்கள், செவிலியர்கள் இல்லாமல் குறைவான விடயத்தி லேயே பணியாளர்கள் காணப்படுகிறார்கள். இருப்பினும் மருத்து வமனை கண்காணிப்பாளர், உறைவிட மருத்துவர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் கூட்டு முயற்சியில் சிறப்பான சிகிச்சை செய்து வருகிறார்கள். பொதுமக்கள் தென்காசி மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி இந்த பலன்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *