May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற பாஜக எம்.எல்.ஏ. கைது

1 min read

BJP MLA who received Rs 40 lakh bribe Arrest

27.3.2023
40 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் பாஜக எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர்.

பாஜக எம்.எல்.ஏ.

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் மாடால் விருபாஷப்பா. மைசூரு சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்தின் தலைவராகவும் மாடான் விருபாஷப்பா செயல்பட்டு வருகிறார். இவரது மகன் பிரசாந்த். இவர், பெங்களூருவில் குடிநீர்-வடிகால் வாரியத்தில் தலைமை கணக்கு அதிகாரியாக பணியாற்றினார்.
இதனிடையே, மைசூரு சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்திற்கு ரசாயனம் சப்ளை செய்ய டெண்டர் வழங்கும் விவகாரத்தில் கடந்த 2-ந் தேதி பெங்களூருவில் உள்ள தன்னுடைய தந்தையான எம்.எல்.ஏ. விருபாஷப்பா அலுவலகத்தில வைத்து ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய போது லோக் அயுக்தா போலீசாரால் பிரசாந்த் கைது செய்யப்பட்டார். பா.ஜ.க. எம்.பி. பேட்டி பின்னர் அந்த அலுவலகம், பிரசாந்த் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.7.72 கோடி சிக்கி இருந்தது. பிரசாந்துடன், அவரது உறவினர் சித்தேஷ், சுரேந்திரா, நிகோலஸ், கங்காதர் ஆகிய 4 பேரையும் லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
இந்த லஞ்ச விவகாரத்தில் எம்.எல்.ஏ. மாடால் விருபாஷப்பாவுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, லஞ்ச வழக்கில் முதல் குற்றவாளியாக பாஜக எம்.எல்.ஏ. மாடால் விருபாஷப்பா சேர்க்கப்பட்டார். போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க விருபாஷப்பா கோர்ட்டில் முன் ஜாமின் பெற்றுள்ளார். மேலும் லோக் அயுக்தா போலீசார் நடத்திய விசாரணையில் தனது மகன் வீட்டில் சிக்கிய பணத்திற்கும், ரூ.40 லட்சம் லஞ்சத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறி இருந்தார். இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் மைசூரு சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து மாடன் விருபாஷப்பா விலகினார். அதேவேளை, விருபாஷப்பாவுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமினை கோர்ட்டு ரத்து செய்தது. இந்நிலையில், 40 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. மாடால் விருபாஷப்பாவை போலீசார் இன்று கைது செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.